இ-பதிவு இணையதளம் முடக்கம்- அமைச்சர் விளக்கம்..!

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த ஊரடங்கு இன்று காலையுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது ஜூன் 14-ஆம்

ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் இ- பதிவு செய்ய இணைய தளத்திற்கு வந்த காரணத்தால் தான் இணையதளம் முடங்கியது.

விரைவில் இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த ஊரடங்கு இன்று காலையுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது ஜூன் 14-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக எலக்ட்ரீசியன், பிளம்மர், கணினி பழுது , மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், கார்பெண்டர், வீட்டு வேலை செய்பவர்கள்இ-பதிவுசெய்தபின் பணிக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனால், அதிகமானோர்இ – பதிவுஇணையத்தில் விண்ணப்பிக்க முயன்றனர். இதனால், இ-பதிவு இணையதளம் முடங்கியது.

இந்நிலையில், இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர்இ- பதிவுசெய்ய இணைய தளத்திற்கு வந்த காரணத்தால் தான் இணையதளம் முடங்கியது. விரைவில் இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.