குடிப்பவர்கள் அதிகமாக குடித்தால் உடல் நலம் கெட தான் செய்யும் -அமைச்சர் தங்கமணி

சட்டப்பேரவையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மீதான மானிய விவாதம் நடைபெற்றது.  அப்போது பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி ,கள்ளச்சாராயம் பெருகும் என்பதால்

சட்டப்பேரவையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மீதான மானிய விவாதம் நடைபெற்றது.  அப்போது பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி ,கள்ளச்சாராயம் பெருகும் என்பதால் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

மேலும்குடிப்பவர்கள் அதிகமாக குடித்தால் உடல் நலம் கெட தான் செய்யும்அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது எனவும்  கூறினார்.

2018 -19 ல் டாஸ்மாக் வருவாய் –ரூ.31157.83கோடியை பெற்றது.  2017 -18 ல் டாஸ்மாக் வருவாய் –ரூ.26797.96 கோடியாகஇருந்தது. 2017 -18-ம் ஆண்டை காட்டிலும் 2018-19ம் ஆண்டில்  டாஸ்மாக் வருவாய்ரூ.4359.87 கோடிஉயர்ந்து உள்ளது.