விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய திட்டங்கள் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது என்பதை முதல்வர் பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் தக்கல் முறையில் 5,000 விவசாய மின் இணைப்புகள் 6 மாத காலத்திற்குள் வழங்கப்பட்டுவிடும் […]
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதியில்லை. நாடு முழுவதும் மதுபான கடைகளும் திறக்கப்படவில்லை. தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்துவருகிறது. இதனால், மது பிரியர்கள், சானிடைசர்கள் குடித்து மரணிக்கும் செய்திகளும், கள்ளச்சாராயம் காய்ச்சும் செய்திகளும் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கிறது. இதனால், தமிழகத்தில் ஏதேனும் கட்டுப்பாடுடன் மது கடைகள் திறக்கப்படுமா என மதுபிரியர்களிடையே கேள்வி எழுந்தது. […]
கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் விதத்தில் பிரதமர் மோடியின் வலியுறுத்தல்படி, நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவரும் நேற்று சரியாக இரவு 9 மணி அளவில் 9 நிமிடங்கள் வீட்டு மின்விளக்குகளை அணைத்துவிட்டு, விளக்குகளை ஏற்றினர். தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் இதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மின்வாரியம் மேற்கொண்டிருந்தது. அதாவது குறிப்பிட்ட நேர இடைவெளியில் 1,200 மெகாவாட் மின்சாரம் குறையும் என எதிா்பாா்த்திருந்தோம். ஆனால் 2,200 மெகாவாட் மின்சாரம் குறைந்திருந்தது என […]
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு 21 நாள்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து அமைச்சர் தங்கமணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஏப்ரல் 14-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் மின்சார கட்டணம் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் கட்ட முடியவில்லை என்றாலும் ஏப்ரல் 14-ம் தேதி வரை மின்துண்டிப்பு இருக்காது என அமைச்சர் தங்கமணி கூறினார். சமீபத்தில் திருவண்ணாமலையில் தெரியாமல் மின்துண்டிப்பு நடந்துவிட்டது உடனடியாக எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் அங்கு பேசி அங்கு மட்டுமல்லாமல், மாநிலம் […]
உலக முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு வெளிநாட்டவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. மேலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வரும் 31ம் தேதி வரை பல விஷயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த […]
நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கிய பிறகு பேசிய அமைச்சர் தங்கமணி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 3 மற்றும் 4வது அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் புதிய மின் இணைப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஏற்படும் தொழிநுட்ப கோளாறுகள் உடனுக்குடன் சரி செய்யப்படுவதாக கூறினார். மின் பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழில் தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இன்று சட்டசபையில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அமைச்சர் தங்கமணி நடப்பாண்டில் 50,000 புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்தார். 50,000 புதிய இலவச விவசாய மின் இணைப்புகளில் 25,000 மின் இணைப்புகள் தட்கல் முறையில் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.
இன்று சட்டசபையில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அமைச்சர் தங்கமணி டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். இந்த ஊதிய உயர்வால் 6,913 மேற்பார்வையாளர்கள், 15,347 விற்பனையாளர்கள்மற்றும் 3437 உதவி விற்பனையாளர்கள் பயன்பெறுவர். ஊதிய உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூபாய் 15.42 கோடி கூடுதலாக செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் […]
டெல்லியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கோடை காலத்தையொட்டி தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்கவும் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி கையில் ஒப்படைப்போம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் அதிக குழப்பங்கள் நிலவி வருகின்றது.கட்சியில் உள்ள சில பிரமுகர்கள்அதிகாரப் போட்டியில் உள்ளனர்.அதே சமயத்தில் பதவிக்கும் ஆசைப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.பிரிந்து சென்ற பன்னீர்செல்வமும் பின்னர் பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வராக பதவி வகித்து வருகின்றார்.இதனிடையே வருகின்ற 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற […]
சட்டப்பேரவையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மீதான மானிய விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி ,கள்ளச்சாராயம் பெருகும் என்பதால் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது என கூறினார். மேலும் குடிப்பவர்கள் அதிகமாக குடித்தால் உடல் நலம் கெட தான் செய்யும் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறினார். 2018 -19 ல் டாஸ்மாக் வருவாய் – ரூ.31157.83 கோடியை பெற்றது. 2017 -18 ல் டாஸ்மாக் வருவாய் […]
குடிநீர் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் காலி பணியிடம் நிரப்புவதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.குடிநீர் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் மின்வெட்டு இல்லை, காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் கடந்த 27-ம் தேதி ஒருசில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது . மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது. மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் பொய் பிரசாரத்தை முறியடித்து வெற்றி […]
ஆர்.கே.நகரில் மக்கள் செல்வாக்கு இருந்தது என்றால் ரூ.20 நோட்டை டிடிவி தினகரன் கொடுத்தது ஏன்?என்று அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ஆர்.கே.நகரில் மக்கள் செல்வாக்கு இருந்தது என்றால் ரூ.20 நோட்டை டிடிவி தினகரன் கொடுத்தது ஏன்?என்றும் டிடிவி தினகரனின் நடவடிக்கைகளால் அவரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் பாஜகவின் பினாமி ஆட்சி என டிடிவி தினகரன் கூறுகிறார், கட்சியின் கொள்கை அடிப்படையில்தான் ஆதரவு கொடுத்து […]