எதுவுமே செய்யாதது தான் பழனிசாமி ஆட்சியின் மிகப்பெரிய சாதனை -மு.க. ஸ்டாலின்

Doing nothing is the greatest achievement of the Palanisamy regime. Stalin

தமிழர்களின் பெருமையை அழிக்க நினைக்கும் மத்திய அரசுடன் கூட்டு வைத்துள்ளது அதிமுக அரசு என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்கள் குறைகள் கேட்கும்உங்கள் தொகுதியில் ஸ்டாலின்பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் இன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தேர்தலுக்காக வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சமத்துவபுரம்  அமைத்து தரப்படும்.கருணாநிதி ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அதனை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி விடும்.விவசாயத்திற்கான முக்கிய திட்டமான முல்லை பெரியாறு திட்டம் சிவகங்கைக்கு கொண்டு வரப்படும்.தமிழர்களின் பெருமையை அழிக்க நினைக்கும் மத்திய அரசுடன் கூட்டு வைத்துள்ளது அதிமுக அரசு.சிவகங்கை அமைச்சரை நான் பலமுறை சட்டசபையில் தேடி பார்ப்பேன் ,ஆனால் கிடைக்கமாட்டார்.எதுவுமே செய்யாதது தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப்பெரிய சாதனை.மக்களைப்பற்றி முதலமைச்சர் பழனிசாமிக்கு எந்த கவலையும் இல்லை.  நீட் தேர்வு ,7 பேர் விடுதலை ,விவசாயிகள் தொடர்பாக பழனிசாமி நாடகம் நடத்தி வருகிறார் என்றும் பேசியுள்ளார்.