திமுக ஆட்சியில் கோவிலில் சென்று வழிபடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவையா? – அண்ணாமலை

இந்தத் திறனற்ற திமுக ஆட்சியில் கோவிலில் சென்று வழிபடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவையா? என அண்ணாமலை ட்வீட்.

இந்தத் திறனற்ற திமுக ஆட்சியில் கோவிலில் சென்று வழிபடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவையா? என அண்ணாமலை ட்வீட்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இறைவழிபாட்டிற்கு சென்ற சென்னை மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன், அனுமதியின்றி கூட்டம் கூட்டியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தத் திறனற்ற திமுக ஆட்சியில் கோவிலில் சென்று வழிபடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவையா? மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இறைவழிபாட்டிற்கு சென்ற சென்னை மாமன்ற உறுப்பினர் திருமதி உமா ஆனந்தன்உட்பட 75 பேர் மீது வழக்குத் தொடுத்து மத வழிபாட்டு உரிமைகளைப் பறித்துள்ளார்கள்.

கோபாலபுரம் குடும்பத்தார் கோவிலுக்கு செல்லும்போது, பக்தர்களை மணிக்கணக்கில் காக்க வைத்தார்கள். அதற்கு இதுவரை ஏதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? ஒருமித்த சிந்தனையோடு சிலர் கூடி கோவிலுக்கு செல்லக்கூடாது என்று சட்டம் எங்கேனும் உள்ளதா?

மக்களின் அன்றாட பிரச்சனைக்குத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்கும் இந்த திமுகஅரசின் நடவடிக்கையை பாஜகவன்மையாக கண்டிக்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node