மாபெரும் போராட்டத்தை நடத்தும் சூழ்நிலையை உருவாக்கி விட வேண்டாம்-ஸ்டாலின்..!

amendment must be approved by the Governor of Tamil Nadu immediately; The Chief Minister should go in person and insist on getting.

திமுக தலைவர் மு.கஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் வழியில் பயின்றோருக்கு தமிழக அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை 2010ஆம் ஆண்டில் நிறைவேற்றி அன்றே அரசு ஆணையம் பிறப்பித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.

துவக்கம் முதல் தமிழ்க் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு முழுபயனும் கிடைக்க வேண்டும் என பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு 10 12-ஆம் வகுப்புகளையும், பத்தாம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்ற சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஏறக்குறைய எட்டு மாதங்களாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

துறை அமைச்சர் என்ன செய்கிறார்.? சட்ட அமைச்சரின் ஏன் ஒப்புதல் பெறாமல்  காலம் கழிக்கிறார்? முதலமைச்சர் பழனிசாமி அரசின் நிர்வாகத்தில் கவனம் செலுத்துகிறாரா..? குரூப்-1 பதவிகளிலேயே முறையாக இட ஒதுக்கீடு  செயல்படுத்தப்படவில்லை என்றும் தெரிந்தும் முதலமைச்சர் உரிய அழுத்தம் தராமல் அரசியல் விளம்பரத்திற்காக ஒவ்வொரு ஊராக சுற்றி வருவது மிகுந்த கண்டனத்துக்குரியது.

சட்டத் திருத்தத்திற்கு உடனடியாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்; முதலமைச்சரே நேரில் சென்று வலியுறுத்தி இந்த ஒப்புதலை பெற வேண்டும். காலம் தாழ்த்தி அதற்கு -அதற்காக திமுக ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தும் சூழ்நிலையை உருவாக்கி விட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.