திமுக இந்தி திணிப்புக்கு எதிராக நடத்தும் போராட்டம் மடை மாற்றும் செயல் – ஆர்.பி.உதயகுமார்

கோவை சம்பவத்தில் முதல்வர் அவர்கள் மௌனம் கலைத்து பேச வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் பேட்டி.

கோவை சம்பவத்தில் முதல்வர் அவர்கள் மௌனம் கலைத்து பேச வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் பேட்டி.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் அரசின் மெத்தன போக்கினால் தான் மழை நீர் வடிகாலில்  செய்தியாளர் விழுந்து இறந்துள்ளார். பருவமழை  தொடங்கியுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.

மேலும் கோவை சம்பவம் குறித்து பேசியவர் கோவை சம்பவத்தில் முதல்வர் அவர்கள் மௌனம் கலைத்து பேச வேண்டும். தீவிரவாதம் பயங்கரவாதத்திற்கு எதிராக திமுக தலைமையிலான அரசு வேடிக்கை பார்த்தால் ஆட்சியில் இருந்தவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக இந்தி திணிப்புக்கு எதிராக நடத்தும் போராட்டம் மடை மாற்றும் செயல் என்றும், தமிழுக்கு ஆபத்து என திமுக பேசி வருகிறது என்றும், தமிழுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதிமுக முதலில் நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.