இனி அம்மா உணவகங்களில் இலவச உணவு:செலவை ஏற்கும் திமுக...!

DMK will pay the cost of free meals at Amma restaurants in Coimbatore.

கோவையில் உள்ள அம்மா உணவகத்தில் இலவச உணவை ஏற்பாடு செய்து அதற்கான செலவை  திமுக ஏற்கும் என்று அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த இரண்டு நாட்களாக சென்னையை விட கோவையில் ஏராளமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்காரணமாக,கோவை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஏற்பாடுகள் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.ஏற்கனவே கோவையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து,ஊரடங்கு காரணமாக வேலையின்றி வருமானம் இல்லாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் ஏழை மக்களின் பசியைப் போக்க அம்மா உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கோவையில் உள்ள அம்மா உணவகங்கள் முழுவதிலும் இலவச உணவுகள் வழங்கப்படும் என்றும் அதன் செலவுகளை திமுக ஏற்கும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.இந்த அறிவிப்பால்,கோவை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.