திமுக மக்கள் கிராம சபை கூட்டம் – மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

It has been informed that MK Stalin is to participate in the DMK people's council meeting to be held in Tiruvallur - Chennai districts.

திருவள்ளூர் – சென்னை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றுதிருவள்ளூர் – சென்னை ஆகிய மாவட்டங்களில்திமுக மக்கள் கிராம சபை கூட்டம்  நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.