வருகின்ற 13 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் – அரசு தலைமை கொறடா அறிவிப்பு..!

DMK MLA'S to meeting on 13th - Govt announces Korada ..!

வருகின்ற 13 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வருகின்ற 13 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோ.வி செழியன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும்.

கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் “,என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,வெள்ளிக்கிழமை சட்டபேரவை கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், 13 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்  நடைபெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளதாக அரசு தலைமை கொறடா கூறியுள்ளார்.

unknown node