சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், இந்திய தேர்தல் ஆணையம், உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க கூறி வழக்கை அடுத்த மாதம் 4-ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.