தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கையெழுத்திடும் மனுவை ஆதரிக்கிறேன் என ப.சிதம்பரம் ட்வீட்.
சமீப காலமாகவே ஆளுநருக்கு, திமுகவிற்கு இடையே மோதல் போக்கு நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு திமுக கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதனையடுத்து, ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார்.
இதனை தொடர்ந்து, முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம், தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கையெழுத்திடும் மனுவை ஆதரிக்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.
unknown node