விஜயகாந்த், பிரேமலதாவிற்காக தேமுதிகவினர் விருப்பமனு..!

விஜயகாந்த், பிரேமலதா மற்றும் விஜயபாஸ்கரன் போட்டியிட தேமுதிகவினர் விருப்பமனு அளித்துள்ளனர்.

விஜயகாந்த், பிரேமலதா மற்றும் விஜயபாஸ்கரன் போட்டியிட தேமுதிகவினர் விருப்பமனு அளித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெறுவதற்கான தேதியை அதிமுக, திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்த நிலையில்  தேமுதிக சார்பில் இன்று விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது. இந்நிலையில், தேர்தலில் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன் விஜயபாஸ்கரன் போட்டியிட தேமுதிகவினர் விருப்பமனு அளித்துள்ளனர். விருதாச்சலத்தில் விஜயகாந்த்தும், விருகம்பாக்கத்தில் பிரேமலதாவும், அம்பத்தூர் தொகுதியில் விஜயபிரபாகரனும் போட்டியிட தொண்டர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர்.

விஜயகாந்த், பிரேமலதாவிற்காக தேமுதிகவினர் விருப்பமனு..!