பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே சுமார் 116 தொகுதிகளில் கடும் இழுபறி நிலவி வருகிறது.
243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி கூட்டணியின் பெயர், தேசிய ஜனநாயக கூட்டணி என்று அழைக்கப்படுகிறது.
பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே சுமார் 116 தொகுதிகளில் கடும் இழுபறி நிலவி வருகிறது.இதில் 74 தொகுதிகளில்வித்தியாசம்1000வாக்குகளுக்கும் கீழ்42 இடங்களில்வித்தியாசம் 500வாக்குகளுக்கும் கீழ் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.