உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால்தான் வளா்ச்சி பணிகள் நடைபெறும் – விஜயகாந்த்

இன்று தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு  மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.இது தொடர்பாக தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஊரக உள்ளாட்சிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால்தான் கிராமப்புறங்களில் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான வளா்ச்சி பணிகள் நடைபெறும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு  மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.இது தொடர்பாக தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

unknown node

அவரது அறிக்கையில், ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்த தேர்தலில்  கூட்டணியுடனும், தனித்தும் போட்டியிடுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்து கூட்டாக இந்த தேர்தலில்  போட்டியிடுகிறது.உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால்தான் கிராமப்புறங்களில் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான வளா்ச்சி பணிகள் நடைபெறும்.

மாவட்ட ஊராட்சி குழு வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சி மன்ற தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு தேர்தல்  நடைபெற்று கிராமங்கள் வளா்ச்சி பெற இந்த உள்ளாட்சித்  தேர்தல் தேமுதிக வேட்பாளா்களுக்கு முரசு சின்னத்திலும், கூட்டணி கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு அவரவா் சின்னங்களிலும் வாக்களித்து அனைவரையும் வெற்றியடைய செய்திட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.