தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகள் செயல்படும் நேரத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகள் செயல்படும் நேரத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் காலை 8:30 முதல் 12:30 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் 7 மணி வரையிலும் செயல்படும் என்றும், இதர பகுதிகளில் காலை 9 முதல் 1 மணி வரை, பிற்பகல் 2 முதல் 6 மணி வரையிலும் செயல்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தில் நியாயவிலை கடைகள் செயல்பட வேண்டும் என்றும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும், நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்த விவரத்தை குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வண்ணம் நியாய விலைக் கடையின் தகவல் பலகையில் காட்சிபடுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node