சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் முதல்முறையாக ஸ்ட்ரீட் சர்கியூட் (Street circuit) பார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக, அரசு சார்பில் 42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஃபார்முலா-4 கார் பந்தயத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கான பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..! இந்த நிலையில், ஃபார்முலா 4 கார் […]
தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி அமைந்த பிறகு, நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளினால் (சூதாட்டம்) பணத்தை இழந்து அதிக கடன்களை வாங்கி பலர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் தமிழகத்தின் அரங்கேறியுள்ளன. இதனை தடுக்க தமிழக அரசு புதிய சட்டத்தை இயற்றியது. கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டமானது நிறைவேற்றப்பட்டது. […]
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஜூலை 2022 நிலையில் 5 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக பணிபுரியும் தினக்கூலி தொகுப்பூதிய பணியாளர்களின் பணியினை வரன்முறை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் 31.07.2021 அன்று தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாகப் பணிபுரியும் தினக்கூலி/ தொகுப்பூதிய பணியாளர்களின் பணியினை வரன்முறை செய்திட ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் தகுதியான தற்காலிக பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டு […]
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையேயான கருத்து மற்றும் மற்றும் நிர்வாக மோதல்கள் தொடர்ந்து வருகிறார். தமிழக அரசு நிறைவேற்றும் சட்ட மசோதா மற்றும் உத்தரவுகளுக்கு உரிய நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கைய்யெழுத்திட மறுக்கிறார் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் பல முறை முறையிட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி, தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, தமிழக அரசின் உத்தரவுகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து […]
தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமி விழாக்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒவ்வொரும் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்த தருணத்தை பயன்படுத்தி சில பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதுண்டு. இந்த நிலையில், பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி, 120 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர். ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று […]
கடந்த ஆக.6-ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்தார். தமிழகம் வந்த குடியரசு தலைவருக்கு பொன்னாடையும், புத்தகத்தையும் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்சாக வரவேற்பளித்தார். அதேசமயம், நீலகிரி வந்தடைந்த அவர் தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைகள் முகாமுக்கு சென்று, அங்கு தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மி அவற்றை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி தம்பதியையும் குடியரசு தலைவர் சந்தித்தார். செங்கல்பட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் […]
காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை, உச்சநீதிமன்ற உத்தரவுபடி திறந்து விட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. தமிழக அரசு சார்பில் கர்நாடக அரசு உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி, தண்ணீர் தர மறுப்பதாக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி நீர் அடுத்த 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் […]
திருச்சி மாவட்டம் முக்கொம்பில் காவலர்கள் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக, சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில்,கடந்த 04.10.2023 அன்று மாலை சுமார் 4-00 மணியளவில், திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய சரகம், முக்கொம்பு சுற்றுலாத் தலத்திற்கு ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார், நவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து பணியில் பணிபுரிந்து வரும் சங்கர் […]
கடந்த 9-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டமானது 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்த நிலையில், இக்கூட்டம் இன்றுடன் நிறைவடைகிறது. முதல் நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இதனையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் நடக்கும் என கடந்த […]
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள், தொழிற்சாலைகளில் வட இந்தியத் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் அதிக வேலை செய்வதால் அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், உள்ளூர் மக்கள் அதிக ஊதியமும், அதிக விடுமுறையும் கேட்பதுடன் குறைந்த அளவில் மட்டுமே வேலை செய்வதால் அவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளது குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தான் அரசின் நிலைப்பாடா? தமிழக அரசு விளக்கமளிக்க […]
கடம்பூரில் 138 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியீடு. சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடம்பூரில் 138 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பூங்கா இங்கிலாந்தை சேர்ந்த ராயல் தாவரவியல் பூங்கா கியூ தாவரவியல் பூங்காவுடன் இணைந்து அமைக்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் 205 நிவாரண மையங்களில் 9280 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில், தமிழக முழுவதும் நேற்று பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 205 நிவாரண மையங்களில் 9280 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக விழுப்புரத்தில் 2850 பேரும், காஞ்சியில் 2236 பேரும், மயிலாடுதுறையில் 1831 பேரும், செங்கல்பட்டில் 842 பேரும், திருவள்ளூரில் 708 […]
திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு. சிறப்பு உதவித்தொகை பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் இன்று முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்த 2 ஆண்டுக்கு போட்டிகளில் பங்கேற்க, பயிற்சி எடுக்க உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற இன்று முதல் sdat@tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை மகளீர் தினமான மார்ச் 8 ஆம் தேதி தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு தீவிர ஆலோசனை திமுக அரசு தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் பல வாக்குறுதிகள் நிலைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்த நிலையில், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை மகளீர் தினமான மார்ச் 8 ஆம் தேதி தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு […]
இன்று தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு. இன்று தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வேலை நாளாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டதை, ஈடுசெய்ய வரும் சனிக்கிழமை பணிநாளாக அனுசரிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று பணி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை மறுநாள் 25-ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் […]
22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு இன்று தமிழகம் வருகிறது. கடந்த 11-ஆம் தேதி, தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய உணவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், 22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு […]
22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு நாளை தமிழகம் வருகிறது. கடந்த 11-ஆம் தேதி, தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய உணவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், 22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு […]
சென்னை தலைமைச் செயலகத்தில் விமலா என்ற பெண் தீக்குளிக்க முயற்சி. சென்னை தலைமைச் செயலகத்தில் தனது பூர்வீக சொத்து மீட்டு தர கோரி 48 வயது மதிக்கத்தக்க கும்பகோணத்தை சேர்ந்த விமலா என்ற பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். காவல்துறையினர் அவரை மீட்டு தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். முதலமைச்சரின் தனிப்பிரிவில் இது தொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தீக்குளிக்க முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 11,806 ஹெக்டேர் பரப்பளவிலான காட்டுப்பகுதியில் தேவாங்கு சரணாலயம். தமிழக அரசு, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 11,806 ஹெக்டேர் பரப்பளவிலான காட்டுப்பகுதியை தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கை செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்கும் வண்ணம் தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் தேவாங்குகளுக்கு அமைக்கப்படும் முதல் சரணாலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.