தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

The curfew in Tamil Nadu has been extended from today till July 12 with additional relaxations.

தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், தமிழக அரசு கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

இதனையடுத்து தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் வருகிற 12-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது.