#BREAKING: கோவிஷீல்டு விலை ரூ.100 குறைப்பு.., சீரம் நிறுவனம் அறிவிப்பு..!

மாநில அரசுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.300 விற்கப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.300 விற்கப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் சீரம் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை அறிவித்தது. அதில், கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவிஷீல் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.400 என அறிவித்தது. ஆனால் அதற்கு முன் ரூ.250-க்கு கோவிஷீல்டு தடுப்பூசி விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதன் விலை இருமடங்காக உயர்ந்தது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக  சீரம்  நிறுவனம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசுக்கு 150-க்கு கொடுக்கும் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பதாக கடும் எதிர்ப்பு எழுந்தது.  நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பை அடுத்து மாநிலங்களுக்கு வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசி விலையை சீரம் நிறுவனம் குறைத்துள்ளது.

unknown node

இந்நிலையில், மாநில அரசுகளுக்கு சீரம் இந்தியா நிறுவனம் கொரோனா தடுப்பூசி விலையில் 25% குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி மாநில அரசுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.300 விற்கப்படும் எனவும் தனியார் மருத்துவமனைக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மாற்றமில்லை என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.