மாநில அரசுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.300 விற்கப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. சமீபத்தில் சீரம் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை அறிவித்தது. அதில், கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவிஷீல் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.400 என அறிவித்தது. ஆனால் அதற்கு முன் ரூ.250-க்கு கோவிஷீல்டு தடுப்பூசி விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதன் விலை இருமடங்காக உயர்ந்தது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக சீரம் நிறுவனம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசுக்கு 150-க்கு […]
எதிர்பார்த்தபடி, கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டின் விலை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600, மாநில அரசுகளுக்கு ரூ.400 என உயர்த்தி சீரம் நிறுவனம் அறிவித்திருந்தது. ஏற்கனவே, ரூ.250-க்கு கோவிஷீல்டு தடுப்பூசி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 18 முதல் 44 வயதுக்குட்பட்ட […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி ஆய்வை தமிழகத்தில் நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சோதனை நடைபெற உள்ளது. சென்னையில் 300 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட உள்ளது என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி டி-செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்கள் 14 நாளில் மனித […]