கொரோனா தடுப்பு.., நாளை தலைமை செயலாளர் ஆலோசனை..!

With all the District Collectors, the Chief Secretary is consulting tomorrow.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், நாளை தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாள் காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் 31-ஆம் தேதி காலை 6.00 மணி வரை மேலும் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு நேற்று அறிவித்தது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், நாளை தலைமை செயலாளர் இறையன்பு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.