#BREAKING: கொரோனா நிதி.., திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒருமாதம் ஊதியம்..!

MK Stalin has announced that DMK MPs and MLAs will contribute one month's salary to the Chief Minister's General Relief Fund.

திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதி’க்கு வழங்குவார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலையால் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி வருகிறது. அதிலும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு, இந்த பேரிடரை எதிர்கொள்ளவதற்கு தங்களால் இயன்ற வகையில் உதவிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிட வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.