திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை.!

Negotiations between DMK and Kongunadu People's National Party regarding the distribution of constituencies for the Assembly elections.

சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே பேச்சுவார்த்தை.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் 4 பேர் குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை பொறுத்தவரை அவர்கள் வரும் சட்டப்பேரவை தேர்தலில் 4 இடங்கள் வரை கேட்கப்படுகிறது. ஆனால், திமுகவை பொறுத்தவரை 2 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கொ.ம.தே.க கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 11 இடங்களில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. எனவே, இந்தமுறை அவர்கள் வாக்கு வங்கி சரிந்திருப்பதால் 2 இடங்கள் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது.