முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக சார்பில் வாழ்த்து..!

Pattali Makkal Katchi legislators GK Mani and SB Venkateswaran met and congratulated Chief Minister MK Stalin.

முதல்வர் மு.க.ஸ்டாலினை பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே மணி, எஸ்.பி வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 7-ஆம் தேதி ஆளுநர் முன்னிலையில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

இன்று தேர்தலில் வெற்றிபெற்ற 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவியேற்று வைத்தார். இந்நிலையில், கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொண்ட  பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே மணி, எஸ்.பி வெங்கடேஸ்வரன், சி.சிவகுமார், எஸ்.சதாசிவம் மற்றும் ஆர்.அருள் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.