மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து...!

Chief Minister MK Stalin has telephoned West Bengal Chief Minister Mamata Banerjee to congratulate her on winning the Bhavanipur by-election.

பவானிப்பூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேற்கு வாங்க மாநிலம் பவானிப்பூர் தொகுதியில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இந்த தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜகவை சேர்ந்த பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டார். இந்நிலையில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், 84, 709 வாக்குகள் பெற்று மம்தா பானர்ஜி அவர்கள் வெற்றி பெற்றார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிரியங்காவை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார் மம்தா. இந்நிலையில் நேற்றே  முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மம்தா பானர்ஜியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்பொழுதும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மம்தா பானர்ஜி அவர்களை தொடர்பு கொண்டு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

unknown node