உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம், வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம்.! டெல்லி முதல்வர் அறிவிப்பு.!

கடந்த 4 நாட்களாக வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டு கலவர களமாக மாறியுள்ளது. இந்த வன்முறையில்

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம், வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதலவர் அறிவித்துள்ளார்.

கடந்த 4 நாட்களாக வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டு கலவர களமாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் அப்பகுதியில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் வன்முறையில் வீடுகள் மற்றும் பொது சொத்துக்கள் போன்றவை சேதமடைந்தன. இதனால் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த கலவரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம், வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். முன்னதாக, கலவரத்தில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.