10 ஆண்டுகளுக்கு பிறகு கேள்வி நேரத்தில் பதிலளித்த முதல்வர்..!

One of the Chief Ministers has responded to question time after the last 10 years.

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சர் ஒருவர் கேள்வி நேரத்தில் பதிலளித்துள்ளார்.

சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெறாமல் இருந்தது. இதனால், கேள்வி நேரத்தில் முதல்வர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை முற்றிலும் தடுக்க தமிழக அரசு முன்வருமா..? என்று சட்டப்பேரவையில் பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே மணி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். அதில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்” என்று கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சர் ஒருவர் கேள்வி நேரத்தில் பதிலளிப்பது இது முதன்முறையாகும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.