மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை ...!

The Chief Minister is scheduled to hold consultations with the District Collectors tomorrow.

வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 25 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி கட்சி மூலமாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.