இன்று முதல்...அனைத்து ரேசன் கடைகளில் – தமிழக அரசு அசத்தல்!

Chief Minister Stalin will today launch a program to present a special Pongal package containing 21 items.

சென்னை:21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது.அதன்படி,பொங்கல் தொகுப்பை 2 கோடியே 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் வழங்க அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து,பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரொக்கத்தொகை ஆகியவை நியாயவிலை கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.ஆனால்,அதன்பின்னர்  மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றியிருந்த ரொக்கத் தொகை என்ற வார்த்தையை நீக்கம் செய்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

அதே சமயம்,பொங்கல்சிறப்புபரிசுதொகுப்புவழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.அதன்படி, தெருவாரியாக சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்குபொங்கல்பரிசுத்தொகுப்புவிற்பனை முனைய இயந்திரத்தின் (POS) மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு,இதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மேலும்,பொங்கல் சிறப்பு தொகுப்புக்கான டோக்கன்களும் தேதி மற்றும் நேரம் வாரியாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.இதற்கான,டோக்கன் கிடைக்காதவர்களுக்கு ஜனவரி 10 ஆம் தேதி வரை அதனை விநியோகிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில்,21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று (ஜனவரி 4 ஆம் தேதி) இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து,அனைத்து ரேசன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது.

அதன்படி,குடும்ப அட்டை ஒன்றுக்கு வழங்கப்படும் பொருட்கள்:பச்சரிசி – ஒரு கிலோ,வெல்லம் – ஒரு கிலோ,முந்திரி – 50 கிராம்,திராட்சை – 50 கிராம், ஏலக்காய் – 10 கிராம்,பாசிப்பருப்பு – 500 கிராம்,நெய் – 100 கிராம், மஞ்சள்தூள் – 100 கிராம்,மிளகாய் தூள் – 100 கிராம்,மல்லித்தூள் – 100 கிராம் ,கடுகு – 100 கிராம்,சீரகம் – 100 கிராம்,மிளகு – 50 கிராம்,புளி – 200 கிராம், கடலைபருப்பு – 250 கிராம்,உளுத்தம் பருப்பு – 500 கிராம் ,ரவை – 1 கிலோ, கோதுமை மாவு – 1 கிலோ,உப்பு – 500 கிராம்,துணிப்பை – 1 மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படவுள்ளன.இது ஏழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.