#Breaking:கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்வா? மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் ஆலோசனை..!

Chief Minister Stalin is currently consulting with medical experts on extending the curfew and further relaxation

ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் வருகின்ற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கொரோனா குறைவாகவுள்ள 23 மாவட்டங்களில் பேருந்து இயக்கம்,நூலக அனுமதி, ஜவுளிக்கடைகள் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.