நீண்ட நாள் நிறைவுடன் வாழ வாழ்த்துக்கள் : புதுச்சேரி முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து ...!

As Chief Minister Rangasamy celebrates his birthday today, Chief Minister Stalin congratulated Rangasamy.

புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் ரங்கசாமி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான என்.ரங்கசாமி அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை முதல்வர் ரங்கசாமி அவர்கள் திலாஸ்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் பூஜையை முடித்து அருகில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்து உள்ளார்.

இந்நிலையில், இவருக்கு தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்பொழுதும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்கள் நீண்ட நாள் நிறைவுடன் வாழ அவரது பிறந்தநாளில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node