எனது நல்ல நண்பரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் 54-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. எனவே, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் எனது நண்பரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மக்கள் சேவையில் நீண்ட பணியாற்றவும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
unknown node