திண்டிவனம் ராமமூர்த்தி உடலுக்கு முதல்வர் அஞ்சலி..!

Tamil Nadu Chief Minister MK Stalin paid homage to the late TindivanamRamamurthy 's body with a flower.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைந்த திண்டிவனம் ராமமூர்த்தி உடலுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி(87) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இதனையடுத்து, அவரது உடல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் கட்சியினர், பொதுமக்கள் மரியாதை செலுத்திட வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடலுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். முதலமைச்சருடன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு மருத்துவம் மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் இருந்தனர்.