3 மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு

Chief Minister Palanisamy will inspect Karur, Ariyalur and Perambalur districts tomorrow and the day after tomorrow.

நாளை மற்றும் நாளை மறுநாள் கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர்  பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மாவட்ட ஆட்சியர்கள் ,அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர்  பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து,3 மாவட்ட ஆட்சியர்களுடன்  உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.