சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...! ராகுல் காந்தி ட்வீட்..!

தமிழ் மக்களுக்கு ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டியெழுப்ப திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம்.

தமிழ் மக்களுக்கு ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டியெழுப்ப திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து நேற்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். இதனையடுத்து,நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த அவர், தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்களும் உடன் இருந்தார். முதலமைச்சராக பதவியேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சோனியாகாந்தி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சரான பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சோனியாகாந்தி அவர்களை முதல்முறையாக சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் ‘காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தியும் நானும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திருமதி. துர்காவதி ஸ்டாலினும் ஆலோசனை மேற்கொண்டோம். தமிழ் மக்களுக்கு ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டியெழுப்ப திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம்.’என்று பதிவிட்டுள்ளார்.

unknown node