மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு..ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும், அனைத்து சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை என்பது, 47 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிலான பெருமழை, இந்த இயற்கைப் பேரிடரால் […]
மதுரை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 99% நிறைவடைந்துள்ளது அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். பரந்தூர் விமான நிலையம் அமைக்க இடம் வழங்குவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் கூறுகையில், ‘மதுரை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 99% நிறைவடைந்துள்ளது. பரந்தூர் விமான நிலையம் 100% கட்டாயம் வரும். செய்யின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம். […]
சென்னை மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மெரினா கடற்கரையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழக அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த மணல் சிற்பத்தை திறந்து வைத்தார். அந்த மணல் சிற்பத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம் என எழுதப்பட்டிருந்தது.
கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவு முதல்வர் இரங்கல். கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நல குறைவால் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 82. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளும் இருந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது, மறைவுக்கு தமிழக முதல்வர் […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தாயார் ஹீராபாவின் நூறு ஆண்டுகால போராட்ட வாழ்க்கை இந்திய இலட்சியங்களின் அடையாளம். ஸ்ரீ மோடி […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியை ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தமிழக முழுவதும் பலர் பயன்பற்று வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியை ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார். மேலும், திருச்சி சன்னாசிப்பட்டியில் இத்திட்டத்தின் இயன் முறை சிகிச்சை பெறுபவர் இல்லத்திற்கு […]
திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு. திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் அவர்கள் ரூ.238 கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 635 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.308 கோடி மதிப்பில் 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.79 கோடி மதிப்பில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகினார். […]
திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் அவர்கள் ரூ.238 கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 635 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.308 கோடி மதிப்பில் 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.1000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கு மநீம வரவேற்பு. பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வாய்த்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை கரும்புடன் ரூ. 1000 வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்க்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி […]
திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வழிநெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சி சென்ற சென்றடைந்தார். அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வழிநெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். முதல்வரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று திருச்சியில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முழுவதும் விவசாயம் சார்ந்த எமது மக்களுக்கு இதுவே பொங்கல் பரிசு என ஜோதிமணி எம்.பி ட்வீட். பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வாய்த்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை கரும்புடன் ரூ. 1000 வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வரின் உத்தரவுக்கு நன்றி தெரிவித்து ஜோதிமணி எம்.பி ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க உத்திரவிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் […]
பிற்போக்குச் சக்திகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காத்திட நமது வலிமைமிகு படைக்கலன்கள் ஆயத்தமாகட்டும் என முதல்வர் ட்விட். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இளைஞர், மகளிர், மாணவரணி உள்ளிட்ட 23 அணி நிர்வாகிகளுடன் கட்சி தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ‘நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள திமுகவினர் தயாராக வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜகவினர் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்று அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒடிசாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளைக் காண அழைப்பு. உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ரூர்கேலாவில் வரும் 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒடிசாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளைக் காண வருகை தர வேண்டுமென அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்கள் எழுதிய கடிதத்தை, ஒடிசா அமைச்சர் அடானுசப்யசாசி அவர்கள் மாண்புமிகு […]
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள திமுகவினர் தயாராக வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தல். திமுகவில் உள்ள 23 அணிகளின் நிர்வாகிகளுடன் கட்சி தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இளைஞர், மகளிர், மாணவரணி உள்ளிட்ட 23 அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ‘நாடாளுமன்ற தேர்தல் பணிகள், உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்ட நிலையில், ‘நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள திமுகவினர் தயாராக வேண்டும். தேர்தலில் வெற்றி […]
தற்போது தமிழ்நாட்டில் உள்ள கொரோனா தொற்று XBB வகையாகும் என்று சென்னை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் உரை. புதிய வகை கொரோனா குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சப்பட வேண்டாம் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய வகை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பல்வேறு உத்தரவு மற்றும் அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக […]
அண்ணல் அம்பேத்காரின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். அண்ணல் அம்பேத்காரின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்; சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்; புரட்சியாளர்அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம்!’ என பதிவிட்டுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் […]
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக திரு. உ.மதிவாணன் அவர்களை நியமனம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 1974 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது. தாட்கோவின் கட்டுமானப் பிரிவினால் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்குத் தீப்பிடிக்காத வீடுகள், பள்ளி விடுதிகள் மற்றும் சமுதாயக் கூடங்கள் […]
ஆவடி பகுதியில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய போது, சிறுவனிடம் உரையாடிய முதல்வர். தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மழை பெய்ய தொடங்கிய நாளில் இருந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு […]
இலங்கை தமிழ் மக்களுக்கு எதிர்கால திட்டங்களையும், கௌரவமான வாழ்க்கையையும் அறிவித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏற்கனவே இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்ட பேரவையில் இன்று இலங்கை தமிழர்களுக்கு, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். இதனையடுத்து, கனிமொழி எம்.பி அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘வாழ்விடமிழந்து, […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளார். கடந்த 4-ம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவெடுத்த நிலையில், நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே இதுதொடர்பான தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், […]