மேற்கு வங்கத்தில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை  முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நேரில் ஆய்வு...!

Chief Minister Mamata Banerjee today inspected the areas affected by the Yaas storm in West Bengal

மேற்கு வங்கத்தில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை  முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நேரில் பார்வையிட உள்ளார்.

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்க தொடங்கிய நிலையில்,பாலசோர் பகுதியில்,முழுவதுமாக கரையை கடந்த யாஸ் புயலானது மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது.

அவ்வாறு,புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 130 முதல் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன. மேலும்,தொடர்ந்து பலத்த காற்று வீசியதால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

இந்நிலையில்,புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கடந்த 26 ஆம் தேதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,”யாஸ் புயலின் காரணமாக மாநிலத்தின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து முன்னதாகவே 15,04,506 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

எனினும்,அதி தீவிரமாக வீசிய புயலால் குறைந்தது ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன.மேலும் ,புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன”,என்று தெரிவித்தார்.

இந்நிலையில்,மேற்கு வங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஹெலிக்காப்டர் மூலம் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.மேலும்,கள ஆய்வுக்கு பின்னர் புயலால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு குறித்து இறுதி அறிக்கை அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.