முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்து செய்தியில், இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், மிகச் சிறந்த அறிஞருமான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத்தன்மையை அளித்தார், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார், வறுமையைப் பெருமளவில் குறைத்தார், இவை அனைத்தையும் பணிவின் சிகரமாக இருந்து அவர் சாதித்தார். அவர் நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் பெற்றுத் திகழ விழைகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
unknown node