நல்லகண்ணு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கனிமொழி எம்.பி ட்வீட். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு அவர்கள் இன்று தனது 98-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமூகத் தொண்டை வாழ்வாகக் கொண்டவர்; பொதுவுடைமை சித்தாந்தத்தின் சிகரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல […]
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு அவர்கள் இன்று தனது 98-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தி.நகரில் உள்ள நல்ல கண்ணு அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் மு. வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 50-வது பிறந்தநாளை கொண்டாடும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த சிறப்பு நாளில் உங்களுக்கு எப்போதும் அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி. இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், முதலவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அவர்கள் நீண்ட ஆயுளோடும் நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது […]
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன், […]
நடிகர் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை. பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.அந்த ட்விட்டர் பதிவில், ‘இந்திய திரை உலகின் தலைசிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான திரு.கமலஹாசன் அவர்களுக்கு பாஜக சார்பில் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து குறிப்பில், ‘இன்று 58-வது பிறந்தநாளை கொண்டாடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேசத்திற்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகள், நல்ல ஆரோக்கியத்தையும் அமைதியையும் வழங்க பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். […]
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘வாழும் லெஜண்ட் & இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நட்சத்திரம் அமிதாப் பச்சன் இன்று 80 வயதை எட்டியுள்ளார். […]
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அரசியல் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் மிக சிறந்த அரசியல்வாதி திரு மன்மோகன் சிங் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அவருடைய அடக்கம், அர்ப்பணிப்பு மற்றும் இந்தியாவிற்கு அவர் […]
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், மிகச் சிறந்த அறிஞருமான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத்தன்மையை அளித்தார், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார், வறுமையைப் […]
பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் ட்வீட். இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! சமூகநீதிக் களத்தில் மேலும் பல்லாண்டுகள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற விழைகிறேன்.’ […]
தோனிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோணி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், தோனிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பிறந்தால் வாழ்த்துக்கள் எம்.எஸ்.தோனி. உங்கள் இணையற்ற சாதனைகள், எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மில்லியன் கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கையை அளித்துள்ளது. சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். Happy […]
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘நமது மாண்புமிகு துணைத் ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் நம் நாட்டிற்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் நேர்மை, விவேகம் மற்றும் […]
இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் ட்வீட். இசைஞானி இளையராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘இன்று தனது 80வது அகவையில் அடியெடுத்து வைக்கும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், தன்னுடைய இசையால் தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றிருப்பவருமான இசைஞானி திரு.இளையராஜா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! […]
தெலுங்கானா ஆளுநருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஈபிஎஸ் ட்வீட். தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘மேதகு தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர்(கூடுதல் பொறுப்பு) டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது மனைவி துர்காவின் சகோதரி ஜெயந்தி சரவணன் இல்ல திருமண விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியை மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். இதனை தொடர்ந்து, திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலில் என் துணைவியாருக்கு நான் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். இரவு 12 மணிக்கு சொல்லிவிட்டேன். இருந்தாலும் எல்லாரும் மேடையில் சொன்னார்கள் நீங்கள் மட்டும் சொல்லவில்லை […]
காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அன்பு சகோதரர் உமர் அப்துல்லாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கூட்டாட்சிக்கான உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க உதவும் என்று நம்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார். Birthday Greetings to dear brother @OmarAbdullah. I hope your unwavering commitment to […]
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.’ என […]
பிரதமர் மோடி அவர்கள், முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி அவர்கள், முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பணியாற்ற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் […]