முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதிலிருந்து ஒரு நாள் கூட ஓய்வு எடுக்கவில்லை – வைகோ

தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முழு நலம் பெற வேண்டும் என வைகோ அறிக்கை.

தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முழு நலம் பெற வேண்டும் என வைகோ அறிக்கை.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தன்னை தனிமைப்படுத்திக்  கொண்டுள்ளார். இந்த நிலையில், முதல்வர் அவர்கள் குணமடைய வேண்டும் என வைகோ அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முழு நலம் பெற வேண்டும். அவர் முதலமைச்சர் பதவி ஏற்றதிலிருந்து ஒரு நாள் கூட ஓய்வு எடுக்கவில்லை. சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்.

வாரத்தில் ஒரு நாளாவது அவர் ஓய்வு எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தமிழ்நாட்டு நன்மைக்காக, இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அவர் முழு உடல் நலனோடு பணியாற்றுவது காலத்தின் தேவையாகும். அவர் விரைவில் முழு நலம் பெற்று தமிழகத்திற்கு பணியாற்ற இயற்கையை வேண்டுகிறேன்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node