ஜெயலலிதாவை போல முதலமைச்சர் செயல்படுகிறார்-செல்லூர் ராஜு..!

The current chief minister has taken the same steps as former chief minister Jayalalithaa to crack down on rowdies.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ரவுடிகளை ஒடுக்க பல நடவடிக்கைகளை எடுத்ததை போல தற்போதைய முதலமைச்சர் முயற்சி எடுத்துள்ளார்.

மதுரையில் நடைபெறும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளை விரைவுபடுத்த மாநகராட்சி ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மனு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள் மேடு பள்ளமாக உள்ளது. அதை விரைவில் சீரமைக்க வேண்டும்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ரவுடிகளை ஒடுக்க பல நடவடிக்கைகளை எடுத்தார். அதே போல தற்போதைய முதலமைச்சர் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளார் எனக் கூறினார்.