மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக (CEA) நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஆனந்த நாகேஸ்வரனுக்கு முதற் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.
மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக (CEA) டாக்டர் ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. பிப்.1-ல் மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அனந்த நாகேஸ்வரனுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பொருளாதாரத்தை நிர்வகிக்கும் தமிழர்களின் பட்டியலில் அனந்த நாகேஸ்வரன் இணைவதற்கு வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node