திட்டக்குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

Chennai: Chief Minister MK Stalin is holding consultations with the state planning committee today.

சென்னை:மாநில திட்டக்குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் ஆய்வுக் கூட்டம் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

சென்னை எழிலகத்தில்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும்,டிஆர்பி ராஜா,டாபே மல்லிகா சீனிவாசன் மற்றும் சித்த மருத்துவர் சிவராமன் உள்ளிட்ட உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.

திட்டக்குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!