கடந்த ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தினங்களில் சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில்தொடங்க, தொழில் விரிவுபடுத்த என மொத்தம் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பல்வேறு நிறுவனங்கள் கையெழுத்திட்டன. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது..! விசிக மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், தமிழகத்தில் சுமார் 27 லட்சம் […]
வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, கொளத்தூர், திரு.வி.க நகர் 15 செ.மீ. மழையும், அம்பத்தூரில் 14 செ.மீ. மழையும் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு […]
அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்று,தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது துரித நடவடிக்கையால், பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்த சஷ்டிகுமார் அவர்களது உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவில் வசிக்கும் திரு. பாலசேகரன் என்பவரின் மகனான சஷ்டிகுமார் பாலசேகரன் என்பவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப் படிப்பு பயிலச் சென்றதாகவும்,15-1-2022 அன்று காலை 8 மணியளவில் அருவியில் குளிக்கச் சென்ற போது,சஷ்டிகுமார் […]
சென்னை:மாநில திட்டக்குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் ஆய்வுக் கூட்டம் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. சென்னை எழிலகத்தில்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். மேலும்,டிஆர்பி ராஜா,டாபே மல்லிகா சீனிவாசன் மற்றும் சித்த மருத்துவர் சிவராமன் உள்ளிட்ட உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று பதிலுரை அளிக்கவுள்ள நிலையில்,தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு. நடப்பு ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது.இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு,தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் என்றும், சட்டப்பேரவையில் கேள்வி நேரம்,முதலமைச்சர் பதிலுரை நேரலை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இதனைத் […]
சென்னை:ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,நேற்று மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது.இதனால் தமிழகத்தில் 34 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]
சென்னை:1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா வெற்றி பெற்ற 50 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரானது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது.இப்போரில்,டிசம்பர் 16 ஆம் தேதி இந்தியாவும் முக்தி பாஹினியும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று வங்கதேசம் உருவாக்கப்பட்டது.அப்போது,சுமார் 90,000 பாகிஸ்தான் போர் வீரர்கள் சரணடைந்தனர். இப்போரில் பல மனித […]