தமிழக சட்டப்பேரவை நேற்று நடைபெற்றது.பேரவையில் அமைச்சர் காமராஜ் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் தானிய ஈட்டுக் கடன் உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் தனி நபர் நகைக்கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.