#Breaking:"ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை" – நிர்மலா சீதாராமன்..!

Central Finance Minister Nirmala Sitharaman declared that GST has not GST for Amphotericin-B medicine used for black fungal treatment

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில்,இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிலையில்,இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து,செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் “ஆம்போடெரிசின்-பி” மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை என அறிவித்துள்ளார்.