Breaking:புதுச்சேரியில் போட்டியின்றி பாஜக எம்.பி ஆகிறார் செல்வகணபதி...

Breaking: Selvaganapathy becomes MP without contest in Puducherry ...

புதுச்சேரியில் பாஜக எம்.பியாக செல்வகணபதி போட்டியின்றி தேர்வாகிறார்.

புதுச்சேரி மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில்,புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் செல்வகணபதி வேட்பு மனு தாக்கல் செய்தார். முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான முனுசாமியிடம்  செல்வகணபதி இன்று மனு தாக்கல் செய்தார்.

மேலும்,அங்கீகாரம் இல்லாத 3 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்பமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில்,புதுச்சேரியில் பாஜக மாநிலங்களவை உறுப்பினராக செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.கடைசி நாளான இன்று பிற அரசியல் கட்சியினர் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் செல்வகணபதி போட்டியின்றி தேர்வாகிறார்.புதுச்சேரியில் பாஜக சார்பில் ஒருவர் எம்.பி ஆவது இதுவே முதல்முறை ஆகும்.