#Breaking: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு – 6 மாதத்தில் முடிக்க உத்தரவு!!

Coimbatore Women's Court ordered to complete Pollachi sexual harassment case in 6 months.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவு.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து முடிக்க வேண்டும் என கூறியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள அதிமுக நகர மாணவரணி முன்னாள் செயலாளர் அருளானந்தம் என்பவரின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், சிபிஐ விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்பி முத்தரசியை நியமித்து சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#Breaking: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு – 6 மாதத்தில் முடிக்க உத்தரவு!!