#BREAKING: பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் தொடங்கியது!!

Downloading of mark certificate for 12th class students has started in Tamil Nadu.

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் 2020-21ம் கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, இன்று முதல் மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

அந்தவகையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி,www.dge.tn.gov.in&www.dge.tn.nic.inஆகிய இணையதளங்களில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள் தங்கள்து பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.