#breaking: அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா!!

As the Modi-led cabinet is set to expand, 12 ministers have resigned.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 12 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2வது முறையாக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்படவுள்ளது. அதற்கான 43 புதிய மத்திய அமைச்சர்களின் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டது.

43 புதிய மத்திய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவானது இன்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்வார், தாவர்சந்த் கெலாட், தபஸ்ரீ சவுத்ரி, சதானந்தா கவுடா, ஹர்ஷவர்தன் உள்ளிட்ட பலரும் தங்களது பதவியை தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா செய்துள்ளனர்.  பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், இதுவரை 12 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

unknown node